திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (23:12 IST)

''விக்ரம்'' படம் வெற்றி... நன்றி தெரிவித்து கமல் வீடியோ வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றியைப்  பெற்றுள்ளது.

இந்த நிலையில், விக்ரம் படம் 7 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வ்சூலித்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கமலஹாசன் நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள என் தமிழ்ச் சொந்தங்களுக்கு என் வணக்கம், திரையிட்ட இடமெல்லாம் விக்ரம் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த பிரமாண்ட வெற்றியை எனக்குப் பரிசளித்த என் தொப்புட்கொடி உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறந்த படங்கள் மூலம் உங்களை எண்டர்டெயயிண்ட் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.