வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (22:17 IST)

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மர்மமான முறையில் மரணம்

Prathyusha Garimella
தெலுங்கானாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கேரிமல்லா வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக சினிமா பிரபல நடிகைகள், டிசைனர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 4  நடிகைகள் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த நிலையில், இன்று தெலுங்கானா மா நிலம் ஐதராபாத் அருகே பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் வசித்து வந்த பிரபல ஆடை வடிவமைப்பாளார் பிர்தியூஷா கேரிமல்லா தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.

அந்த அறையில் கார்பன் மோனாக்சைடு வாயு சிலிண்டர் கண்டறியப்பட்டதால் இது கொலையா , தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.