திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (19:46 IST)

இந்திய அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜினாமா!

saji cheriyan
இந்திய அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜினாமா!
இந்திய அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள மாநில மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் என்பவர் இந்திய அரசியலமைப்பு சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். 
இந்த கருத்துக்கு கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
 
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக வேறு வழியின்றி கேரள மீன் வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.