செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (10:11 IST)

விக்ரம் படத்துக்கு பிறகு நல்ல கலெக்‌ஷன் கொடுத்த ஒரே படமாக ‘யானை’… பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

அருண் விஜய் மற்றும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதற்கு முன்னதாக யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. விக்ரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஜூலை 1-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ‘யானை’  1500 திரைகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வார இறுதி நாட்களில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய யானை திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை தமிழ் நாட்டில் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் ரிலீஸூக்குப் பின்னர் எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் யானை திரைபடம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.