செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (09:19 IST)

விக்ரம் படத்தின் பாடல்களுக்காக லோகேஷின் இணை இயக்குனரைப் பாராட்டிய அனிருத்… வைரல் Tweet!

விக்ரம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

விக்ரம் படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியவையும் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் படத்தில் பாடல்களை எழுதிய விஷ்னு எடாவனைப் பாராட்டி டிவீட் செய்துள்ளார். விஷ்ணு விக்ரம் படத்தில் லோகேஷின் உதவியாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சம்மந்தமான ட்வீட்டில் “ இது விக்ரம் டைட்டில் பாடம் மற்றும் போர்க்கண்ட சிங்கம் ஆகிய பாடல்களை எழுதிய விஷ்ணு எடாவனுக்கான ஸ்பெஷல் ட்வீட். பொறுத்திருந்து பாருங்கள். ஒரு வெற்றிகரமான வருங்கால இயக்குனர் விரைவில் வருவார் அற்புதனமான பாடல் வரிகள் பற்றிய அறிவோடு.” என புகழ்ந்துள்ளார்.