சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.21’ படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான எஸ்கே 21 படத்தின் நாயகியாக சாய்பல்லவி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பினாலேவின் போது கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது
இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
இன்று சாய்பல்லவி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது