சில மாதங்கள் தள்ளிப்போன மஹான் ரிலீஸ்… விக்ரம் எடுத்த முடிவுதான் காரணமாம்!
விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் நடித்துள்ள மஹான் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில்தான் ரிலீஸாக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்துவிடலாமா என்று படக்குழுவினர் முதலில் யோசித்தனர். ஆனால் இந்த முடிவை விக்ரம் திட்டவட்டமாக வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். ஏனென்றால் முதன் முதலில் தன் மகனோடு சேர்ந்து நடித்திருக்கும் படம் திரையரங்கில் வெளியானால்தான் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று முடிவு செய்துள்ளாராம்.