1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (18:19 IST)

பிக்பாஸால் பாதிக்கப்படும் விக்ரம் படத்தின் ஷூட்டிங்!

நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது தெரிந்ததே. 

இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தைப் பற்றிய புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை காரைக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. இதற்குக் காரணம் கமல் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதால் இரண்டுக்கும் வசதியாக இருக்க வேண்டும் என்பதால் சென்னையிலேயே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம்.