மெகாஹிட் பட இயக்குனருடன் இணையும் விக்ரம்!
நடிகர் கமலின் தயாரிப்பில் கடாரம் கொண்டேன் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து, விக்ரமின் அடுத்த படத்தை இயக்க உள்ளஇயக்குனர் குறித்து தகவல்கள் வந்துள்ளன. விக்ரமின் அடுத்த படத்தை நயன்தாரா, அதர்வா ஆகியோரை வைத்து இமைக்கா நொடிகள் என்ற ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து தான் இயக்க உள்ளாராம்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்து உறுதியான தகவலகள் வெளியாகவில்லை.