வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:24 IST)

’மாவீரன்’ படப்பிடிப்பில் இணைந்த அதிதி ஷங்கர்: முதல் காட்சியே ரொமான்ஸ்!

aditi
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அதிதி ஷங்கர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியானது
 
விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்நடிக்கும் இரண்டாவது படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிதி ஷங்கர்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்திருப்பதாக அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது 
 
மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.