ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (21:18 IST)

விஜய்யின்' கில்லி' படம் போல் உருவாகும் துருவ் விக்ரம் படம்!

DHURUV VIKRAM-MARI SELVARAJ
துருவ் விக்ரம் படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்கவுள்ள  படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை அடுத்து,  உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  நடிப்பில் சமீபத்தில் தியேட்டரில் வெளியான படம் மாமன்னன். இத்திரைப்படம் வெளியாகி  ரசிகர்களின் வரவேற்பை பெற்று, வசூலிலும் ரூ 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

இப்படத்திற்கு முன்பே துருவ் விக்ரம் படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கபடி விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரடக்சன் தயாரிக்கிறது.  இப்படம் 1990 கால கட்டங்களில் உள்ள கதை என்றும், இது நெல்லை, தூத்துக்குடி மாவவட்டங்களில் வரும் செப்டம்பரில்   ஷூட்டிங்  தொடங்கும் என தகவல் வெளியாகிறது.