வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:22 IST)

லியோ படத்தோடு மோதுகிறதா விக்ரம்மின் துருவ நட்சத்திரம்?

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸூக்காக இப்போது காத்திருக்கிறது.

முன்பே சில ரிலீஸ் தேதிகள் திட்டமிடப்பட்ட நிலையில் அந்த தேதிகளில் படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்போது அக்டோபர் 19 ஆம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம்தான் விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.