1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:25 IST)

சமுத்திரக்கனி இயக்கிய ப்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகி விட்டார்.  இதற்கிடையில் அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தமிழில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் சாய் தேஜும் நடித்துள்ளனர். தெலுங்கிற்காக பல மாற்றங்களை திரைக்கதையில் செய்திருந்தார் சமுத்திரக்கனி. ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பவன் கல்யாண் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.