புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (13:11 IST)

தொடங்கியது விக்ரமின் மஹாவீர் கர்ணா !

விக்ரம், கடாரம்கொண்டான் படத்தில் தன் வேலைகளை முடித்துவிட்டு பிரம்மாண்டமாக உருவாகும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் மகாவீர் கர்ணா என்றப் படம் உருவாகி வருகிறது. இதில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் நடிக்க, கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களைப் பல எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அதில் தமிழ் வடிவத்துக்கான வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது..

விக்ரம் இல்லாத மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகளைப் படக்குழு இதுவரைப் படமாக்கி வந்தது. இந்நிலையில் கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்துள்ள விக்ரம் இப்போது கரணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் ’ கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. தொடங்கியது மகாவீர் கர்ணா. தலைசிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே’ எனக் கூறியுள்ளார்.