மகளை பர்தா அணிய கட்டாயப்படுத்தினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

Last Modified வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (06:54 IST)
சமீபத்தில் மும்பையில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் வெளியான 10வது ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா பர்தா அணிந்து வந்திருந்தது குறித்து கருத்து கூறிய நெட்டிசன்கள், ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய வைத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

ஆனால இந்த குற்றச்சாட்டுக்குக் கதீஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் அணியும் உடைகளுக்கும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தன்னுடைய விருப்பப்படியே பர்தா ஆடையை அணிந்திருப்பதாகவும், உண்மை நிலை தெரியாமல், யாரையும் எடை போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தன் வாழ்க்கையில் எது வேண்டும் என்பதை தீர்மானம் செய்யும் அளவுக்கு தான் பக்குவமடைந்து இருப்பதாகவும், எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எந்த உடையை அணிய வேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற சுதந்திரம் இருப்பதாகவும்,
அந்த சுதந்திரத்தைதான் தானும் அனுபவித்து வருவதாகவும் கஜீதா தெரிவித்தார்.

கதீஜாவின் இந்த விளக்கத்திற்கு பின் நெட்டிசன்கள் அமைதியாகினர். ஒருசிலர் தங்கள் கருத்துக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :