1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:42 IST)

தல அஜித்துக்கு இந்த திறமையும் இருக்கா..! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!

தல அஜித்தை புகழ்ந்து நடிகை ஆர்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 



தமிழ் சினிமாவில் தல என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா ரெஸர் பந்தயங்களில் அஜித் பங்கேற்றுள்ளார். 
 
அதனை நிரூபிக்கும் வகையில் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். அவரை போன்று வேறு எந்த நடிகரும் கார் ஓட்ட முடியாது அந்த அளவிற்கு மாஸ் காட்டுவார் . 
 
கார் ரேஸ் , பைக் ரேஸ் , நடிகர் , போட்டோகிராபர் , விமானம் வடிவமைத்தல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் தல அஜித் அவர்கள் தற்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.  


 
ஆம், தல அஜித் துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார் என்பதை  நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று நேற்று முதல் இணையத்தை கலக்கி வருகிறது.  
 
இந்நிலையில் தற்போது  நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் " துப்பாக்கி சுடும் பயிற்சியில் அண்ணன்" என கூறி அஜித் நடந்து செல்லும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 
 
நடிகை ஆர்த்தி அஜித்தின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.