செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (09:52 IST)

ஊழலை ஒழிக்கப்போராடும் அண்ணா ஹசாரேவை இப்படியா கிண்டல் செய்வது?

லோக்பால் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் 4வது நாளாக உண்ணாவிரம் இருந்து வருகிறார். ஆனால் சிலர் அவரை மிக மோசமாக விமர்சித்து கிண்டல் செய்து டிரோல் செய்து வருகிறார்கள்.   


 
மன்மோகன் சிங் தலைமயிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது லோக்பால் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 


 
இந்நிலையில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில், இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை. இதனை கண்டித்து மீண்டும்  அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்  இருந்து வருகிறார். 81வயதாகும் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 4ம் நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் அவரது உடல்நிலையை பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே ஊழலை ஒழிக்கப்போராடும் அண்ணா ஹசாரேவை சிலர் மோசமாக விமர்சித்து கிண்டலாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
அதில் ஒரு மீம்ஸில், எலக்ஷன் வந்துட்டா போதும் சின்ராசை கையில பிடிக்க முடியாது ஊழலை ஒழிக்க பெட்டு, தலகாணியோட கிளம்பிருவாரு..?!  என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.