ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2020 (14:16 IST)

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 
 
அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது. 
 
மேலும், அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , இன்றைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் செய்யப்பட்டு மற்ற நடிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.