ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (14:04 IST)

ரஜினியின் வீட்டிற்கு வருகை தந்த விஜய்யின் தாயார் மற்றும் துர்கா ஸ்டாலின்

rajinikanath house
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படத்தை அடுத்து தலைவர் 170 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் இல்லத்தில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திய நவராத்திரி பூஜையில்  நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர்,  துர்கா ஸ்டாலின், ஓபிஎஸ்,  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் புள்ளிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.