செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:44 IST)

காலையிலேயே நான் வெஜ்.. எல்லா கெட்டப் பழக்கமும்- மனைவி லதா பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

ரஜினிகாந்த் தன்னுடைய உணவுப் பழக்கம் குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய சிகரெட் பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றை விட்டுள்ளார். சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சையும் எடுத்து திரும்பினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “என்னுடைய இளம் வயதில் சில கெட்ட சினேகிதர்கள் காரணமாக எல்லா கெட்ட பழக்கமும் என்னிடம் இருந்தது. தினமும் குடிப்பேன். எத்தனை பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன் என்றே தெரியாது. காலையிலேயே ஆப்பமும் பாயாவும் சாப்பிடுவேன். சிக்கன் 65.. இந்த மூன்று பழக்கமும் சேர்ந்து உள்ளவர்கள் 60 வயதுக்கு மேல் வாழவே மாட்டார்கள். ஆனால் என்னை இதில் இருந்து எல்லாம் மாற்றியது என் மனைவி லதாதான்” எனக் கூறியுள்ளார்.