1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (18:42 IST)

அரசியல் பணிக்காக.... விஜய் ''லியோ'' படத்திற்கு பிரேக்? வெளியான தகவல்

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், 'லியோ படத்தில்' 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11 ஆம் தேதியுடன் , சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, அர்ஜூன், விஜய், மடோனா செபஸ்டியன், மன்சூர் அலிகான் ஆகியோர் வரும் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்.

இப்பாடல் காட்சி ஷூட்டிங் முடிந்த உடன், 2 நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, பிளஸ்2  தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க இந்த இடைப்பட்ட நாட்களை விஜய் பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக தெரிகிறது.

விஜய் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறியாகத்தான் இதை செயல்படுத்த உள்ளதாகவும், இதற்கான வேலைகளை புஸ்ஸி ஆனந்த் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.