வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (14:34 IST)

தனுஷுக்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை...ஏ.ஆர்.ரஹ்மான் இசை...

dhanush Aparna
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அபர்ணா பாலமுரளி. இவர். கடந்த 2013 ஆம் ஆண்டு யாத்ரா துடாருன்னு  என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர்., 8 தோட்டலக்கல், மாயாநதி, சர்வம் தாள மயம், சூரரைப் போற்று, தீதும்  நன்றும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷுடன் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, தனுஷ்50வது படத்தை அவரே இயக்கி  நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஜூலை 1 ல் இப்பட ஷூட்டிங் தொடங்கவுள்ள  நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.