1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (13:09 IST)

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்

kadheeja
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் மின்மினி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

தமிழிசில், சில்லு கருப்பட்டி, ஏலே, மேசான் பிரைமில் வெளியான ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான புத்தம் புது காலை விடியாதா  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலீதா ஷமீம்.

இவர், கடந்த மின்மினி என்ற படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொங்கினார். குழந்தைப் பருவத்தில் இருந்து  வளர் பருவத்தை அடையும் வரையிலான  கதையை அடிப்படையாகக் கொண்டதால், 7 ஆண்டுகள் காத்திருந்து இப்படத்தை  மீண்டும் தொடங்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஏற்கனவே,. கதீஜா எந்திரன் படத்தில் 'புதிய மனிதா' என்ற பாடலை பாடியிருந்தார். அதேபோல், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ் சிறு கிளியே' என்ற பாடலையும் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.