வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (22:25 IST)

அஜித்துக்காக ரிஸ்க் எடுக்கும் யுவன்ஷங்கர் ராஜா

அஜித் ,வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் திட்டமிட்டுள்ள தேதிக்கு முன்னரே அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த படத்தின் மொத்த பணியையும் ஜூலை மூன்றாவது வாரத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டப்பிங் பணிகளை முடித்த இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளாராம். மேலும் டப்பிங் பணியை மிகக்குறுகிய நாட்களில் முடிக்க இரவிலும் கண்முழித்து பின்னணி இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரவில் தூங்காமல் இருந்தால் உடல்நலம் கெடும் நிலை இருந்து அஜித்துக்காக இந்த ரிஸ்க்கை யுவன் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல்  'பில்லா', பில்லா 2, ஆரம்பம், 'மங்காத்தா' போன்ற படங்களின் பின்னணி இசையைவிட இந்த படத்தின் பின்னணி இசை அபாரமாக இருக்க வேண்டும் என்று எச்.வினோத், யுவனிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் 'பிங்க்' படத்திற்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது