அஜித்துக்கு கம்மி ரோல்? விலை போகாத நேர்கொண்ட பார்வை!

Last Updated: புதன், 19 ஜூன் 2019 (17:53 IST)
அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் பெரிதாக விற்பனையாகவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். 
 
அஜித் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார்.  இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 
ஆனால், தயாரிப்பாளர் போனி கபூர் படத்திற்கு அதிக விலை கூறியதால் படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என செய்தி வெளியகியுள்ளது. 
 
மேலும், இந்த படத்தில் அஜித் சிறிய கௌரவ தோற்றத்தில் மட்டுமே வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டம் அடைய விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும், படத்தரப்பு ஹிந்தியில் அமிதாப் பச்சனுக்கு கொடுத்த ரோல் போல் இல்லாமல் தமிழில் அஜித் கேரக்டர் நிறைய நேரம் வரும்படி படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் விற்பனையாக ஆகவில்லை என வெளியாகும் தகவல் போலியானது என விளக்கம் அளித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :