திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (22:10 IST)

நடிகர் விஜயகாந்த் மகன் பாடிய தனிப்பாடல் நாளை ரிலீஸ்

தமிழ் சினிமாவில் முன்னாள் சூப்பர் ஸ்டார் விஜய்காந்த். இவர் அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் விஜய்,சூர்யா என இன்றைய முன்னணி நடிகர்கள் இவரது ஆக்சன் படத்தில் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் முதன் முதலாக தனது குரலில் பாடியுள்ள தனிப்பாடல் நாளை ரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்து நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜயபிரபாகரன் முதல் முறையாக பாடிய, தனி இசைப்பாடலின் (Independent Music) First look நாளை மாலை 5.40 மணிக்கு எனது டிவிட்டர் ( @iVijayakant) பக்கத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். #IndependentMusic எனத் தெரிவித்துள்ளார்.