ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (20:20 IST)

மதுபோதையில் ஈபிள் டவர் உச்சியில் தூங்கிய நபர்கள்..

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் உலகப்பிரசித்த ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இந்த கோபுரத்தைக் காண  வருடம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்று, அதன் மது அருந்திவிட்டு, இரவில் உச்சி கோபுரத்திற்குச் சென்று  அங்கேயே உறங்கியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு ஈபிள் கோபுர பாதுகாவலர்கள் அதை திறக்கும்போது, 2 பேர் உறங்கிக் கொண்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களின் விசாரிக்கையில், போதையில், இரவில் அங்கேயே உறங்கியதாகக் கூறினர். பின்னர், இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.