1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (20:11 IST)

ரஜினிக்கு வாழ்த்து கூறிய கேப்டன் விஜயகாந்த்:வைரல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று தாதாசாகேப் பால்கே என்ற திரையுலகின் மிக உயர்ந்த விருது அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழ் திரையுலகினர் உள்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் அவருக்கு தங்களது தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எனது அண்ணன் விஜயகாந்த் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பதும் விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு, எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து கலைத்துறையில் சேவைசெய்து பல உயரிய விருதுகள் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்
 
விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும் கடந்த பல ஆண்டுகளாக இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,