வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:50 IST)

இசைக்கு மொழி கிடையாது எனக் காட்டியவர்… எஸ்பிபிக்கு விஜயகாந்த் புகழாரம்!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு மாத காலமாக சிகிச்சையில் இருந்த எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்பிபியின் மறைவு குறித்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘எஸ்.பி.பி. மறைவு என்னை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. பல மொழிகளில் பாடி இசைக்கு மொழி கிடையாது என்று நிரூபித்தவர் எஸ்.பி.பி. தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்கும் பாடிய தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பி. திரைத்துறைக்கு மட்டுமில்லாத அனைவருக்கும் எஸ்.பி.பி. மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.