ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:46 IST)

‘அண்ணத்த’ பாடல் தான் எஸ்பிபியின் கடைசி பாடல்: டி இமான் தகவல்

எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்திற்காக என்ற தகவலை பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
எஸ்பிபி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டி.இமான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் எஸ்பிபி அவர்களுடன் ஜில்லா படத்தில் தான் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருப்பதாகவும் அந்த படத்தை அடுத்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் அவர் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த ஆரம்ப பாடலை அவர் தான் பாடி உள்ளதாகவும் டி இமான் தெரிவித்துள்ளார்
 
ரஜினிக்காக எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடலை கம்போஸ் செய்ததை நினைத்து பார்க்கும்போது தான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக கருதுவதாகவும் டி இமான் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து எஸ்பிபியின் கடைசி பாடல் டி இமான் இசையில் ரஜினிகாந்த் படத்தில் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்திற்காக என்பது தெரியவந்து உள்ளது. இந்த பாடல் வெளியாகும் நாளை ஒட்டுமொத்த இசை ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்