1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:10 IST)

விவேக் வீட்டுக்கு சென்று விஜய் அஞ்சலி!

விவேக் வீட்டுக்கு சென்று விஜய் அஞ்சலி!
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பதும் அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவேக் உடன் பல படங்களில் இணைந்து நடித்த விஜய், விவேக் மறைவிற்கு ஒரு டுவிட் கூட போடவில்லை என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்படது.
 
இந்த நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் இன்று காலை விவேக்கின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து விவேக் விஷயத்தில் விஜய் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது