விஜய் படங்களின் ஒளிப்பதிவாளர் திருமணம், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!
விஜய் படங்களின் ஒளிப்பதிவாளர் திருமணம், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!
தளபதி விஜய் நடித்த இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு அவர்களுக்கு இன்று திருமணம் நடந்ததை அடுத்து திரையுலகினர் நேரில் சென்று பலர் வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் ஜிகே விஷ்ணு. இவருக்கும் மகாலட்சுமி என்பவருக்கும் என்று சென்னையில் திருமணம் நடந்தது
இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கல் நேரில் சென்று வாழ்த்துதெரிவித்தனர். குறிப்பாக வரலட்சுமி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நேரில் சென்று ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் பலர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன