வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (08:07 IST)

துணிவோடு ஒரே நாளில் மோதும் வாரிசு… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வாரிசு படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு உச்ச நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் அவர்களின் ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர்.