1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (17:53 IST)

''9 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ்''; வாரிசு பட டிரைலர் புதிய சாதனை

vaarisu
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றாகும்.

வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

புகைப்படக் கலைஞராக இருக்கும் விஜய், தன் தந்தை சரத்குமாரின் விருப்பப்படி பிசினஸ்மேனாக முக்கியமாக சக்சஸ்ஃபுல் பிசினஸ் மேனாக மாறினாரா, கூட்டுக் குடும்பத்தை திரும்பவும் கட்டிக் காத்து, தன் காதலில் ஜெயித்தார என்பது இக்கதையில் டிவிஸ்டாக வரும் என தெரிகிறது.

இந்த டிரைலர் ஏற்கனவே கூறியபடி 5 மணிக்கு வெளியான நிலையில்,.9 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக  சன்டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை இந்த டிரைலரை வெளியான 51 நிமிடத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர், 7.5 லட்சம் லைக்குகளும் 60 ஆயிரம் கமெண்டுகளும் பதிவாகியுள்ளது
.
ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, ஷ்யாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட  நடிகர்கள்  நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக வுள்ளது குறிப்பிடத்தக்கது.