1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2025 (09:48 IST)

விஜய் டிவியில் புதிய சீரியல்.. பழைய சீரியல்களின் நேரம் மாற்றம்..!

விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலொன்று தொடங்கப்பட உள்ளதால், சில பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் குழு இருக்கிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் விஜய் டிவி தொடர்களை அதிக விருப்பத்துடன் தொடர்ந்து பார்க்கின்றனர்.
 
‘சிறகடிக்க ஆசை’ மற்றும் ‘அய்யனார் துணை’ போன்ற தொடர்கள் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘நீ நான் காதல்’ தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. அதன் இடத்தில், மாலை 6 மணிக்கு ‘ஆஹா கல்யாணம்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகும்.
 
மற்றொரு மாற்றம் என்னவென்றால், இப்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சிந்து பைரவி’ தொடர், இனி மாலை 6.30 மணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘மகாநதி’ தொடர், இனி இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
இதற்குப் பிறகு, ‘பூங்காற்றுத் திரும்புமா’ என்ற புதிய தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நேர மாற்றங்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் வந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran