ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (13:09 IST)

லேடி கெட்டப்ல என்னமா ரெடி ஆகுறான் என் தலைவன் - புகழுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

மீண்டும் பெண் வேடத்தில் விஜய் டிவி புகழ் வெளியிட்ட புகைப்படம் இதோ!
 
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் புகழ். எ ந்த நிகழ்ச்சியில் வித்யாசமான பல கெட்டப்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அதன் மூலம் அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் குவிய நடித்தும் வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது லேடி கெட்டப் போட்டு ரெடியாகும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. 
 
இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மன்னிகனும் குஷ்பு மேடம் என குறிப்பிட்டுள்ளார்.