1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (18:14 IST)

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: புகைப்படங்கள் வைரல்!

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: புகைப்படங்கள் வைரல்!
கடந்த சில மாதங்களாக விஜய் டிவி பிரபலங்கள் புதிய கார் வாங்கி வருவதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் புத்தம் புதிய கார் வாங்கியுள்ளார்.
 
விஜய் டிவியில் உள்ள பிரபலங்களான ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மணிமேகலை, சரத், கேப்ரில்லா  உள்பட ஒருசிலர் புதிய கார் வாங்கிய தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது விஜய் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் மைனா நந்தினி புதிய கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.