முதன்முதலாக விஜயின் மகன் நடித்த குறும்படம்! வைரலான வீடியோ...
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக உயர்ந்து வருகிறார். அவருடைய மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
போக்கிரி படத்தில் சிறுவனாக இருந்த சஞ்சய், தற்போது வளர்ந்து பெரிய இளைஞராகி விட்டார்.
அவர் நடித்த குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம்ம ட்ரெண்ட் ஆனது. இதை விஜய் ரசிகர்களே சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
இந்த வீடியோவிற்கு விஜய் ரசிகர்கள் சஞ்சய்க்கு பெரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இன்று வைரலான குறும்படத்தில் விஜய் மகன் இண்ட்ரோ மட்டுமே வந்துள்ளது, இது தொடரும் என தெரிகின்றது. இதற்கிடையே யூடியூபில் அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டு உள்ளது.