பிக் ஆஃபர்: பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்...

VM| Last Updated: திங்கள், 25 பிப்ரவரி 2019 (21:37 IST)
நடிகை நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இந்தப் படம் விண்வெளி கதையை மையப்படுத்தி இருந்தது. 
 
டிக் டிக் டிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிருபிடிச்சவன் படத்தில் நடித்தார். இந்த படமும் பாக்ஸ் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. 
 
இந்நிலையில் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இத்துடன் கயல் சந்திரனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் பிரபுதேவாவுக்கு ஜோடியாக பொன்மாணிக்கவேல் படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார்.
 
இப்போது புதிதாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோலிசோடா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :