சன் டிவி சீரியலில் நடிகர் விஜய் சேதுபதி - தீயாய் பரவும் வீடியோ!
தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் சாதாரணமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்தவர் அல்ல. பெரிய நடிகர், நடிகைகளின் வாரிசுகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க தனது திறமையாலும், முயற்சியாலும் முன்னேறி வந்தவர்.
சினிமா மீது இருந்த ஆசையில் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிப்பு கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிய விஜய் சேதுபதிக்கு ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எதையும் அசாதாரணமாக எண்ணாமல் அத்தனை வாய்ப்பையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பெண்" சீரியலில் பரணி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த சீரியல் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாக இதனை கண்டு ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர். விஜய் சேதுபதியின் கடின உழைப்பும் வளர்ச்சியும் அனைவரையும் ஆர்ச்சர்யப்பட வைத்துள்ளது.