திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:28 IST)

விரைவில் பிக்பாஸ் ப்ரமோஷன் ஷூட்… தொகுப்பாளர் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஒரு சீசனில் இடையில் அவர் வெளியேறிய நிலையில் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் எட்டாவது சீசனில் இருந்து கமல்ஹாசன் தன்னுடைய சினிமா பணிகள் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக ரசிகர்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவித்து கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நீண்ட சுற்றுலா ஒன்றை அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்துத் தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதில் பலரின் பெயர் அடிபட்டாலும், விஜய் சேதுபதியின் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாகவும், விரைவில் அந்நிகழ்ச்சிக்கான ப்ரமோஷன் ஷூட் நடக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.