’விஜய் 64’ படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு

sivalingam| Last Modified புதன், 2 அக்டோபர் 2019 (22:11 IST)
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுக்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான
‘விஜய் 64’ படத்தின் அப்டேட்டுக்களை ரசிகர்கள் கேட்காமலேயே அந்த படத்தின் குழுவினர் தினமும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றுமுன் தினம்
‘விஜய் 64’படத்தில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், நேற்று மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் நடிக்கவுள்ளதாகவும், இன்று மதியம் இந்த படத்தில் சாந்தனு நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு செய்த படக்குழுவினர் தற்போது ‘விஜய் 64’படத்தின் நாயகியையும் உறுதி செய்துள்ளனர்.


‘விஜய் 64’ படத்தில் விஜய்யுடன் டூயட் பாடவுள்ளனர் நடிகை மாளவிகா மேனன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. பேட்ட’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த மாளவிகா மேனனுக்கு இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை கோலிவுட் திரையுலகினர் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய், விஜய், விஜய்சேதுபதி, அந்தோணி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மேனன், அனிருத் ஆகியோர் ‘விஜய் 64’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணையவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :