1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (16:41 IST)

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தானாம்!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதை இயக்க உள்ளாராம் பொன் ராம்.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். ஆனால் இவர்கள் கூட்டணியில் கடைசியில் உருவான சீமராஜா படம் தோல்வி அடைந்ததால் கூட்டணி ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் எம் ஜி ஆர் மகன் என்ற படத்தை தயாரித்து இயக்கி முடித்துள்ளார் பொன்ராம். அந்த படத்துக்கு அடுத்த விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை சன்பிக்சர்ஸ் மூலமாக முதல் காப்பி அடிப்படையில் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளது.