புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (11:57 IST)

விஜய் சேதுபதியைப் பார்த்து வியந்த சமந்தா

விஜய் சேதுபதியின் நடிப்பைப் பார்த்து வியந்து விட்டாராம் சமந்தா.
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் தற்போது இயக்கிவரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. முதலில் இந்தப் படத்துக்கு ‘அநீதி கதைகள்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது பல இடங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார் சமந்தா. குறிப்பாக, திருநங்கை ஷில்பா கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அந்த கேரக்டரைப் பார்த்து வியந்து வியந்து பாராட்டி வருகிறாராம் சமந்தா.