திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த பார்ட்டி: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷின் நிச்சயதார்த்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆகாஷுக்கும் அவரின் பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஸ்லோகா மேத்தா வைர வியாபாரியான ரஸல்  மேத்தாவின் இளைய மகள் ஆவார்.
இதையடுத்து நடந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த பார்ட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள்  ஆராத்யாவுடனும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் கரண் ஜோஹார் ஆகாஷ் மற்றும் ஆகாஷ் அம்பானியின் தோழியான நடிகை கத்ரீனா கைஃப், ஆமீர்  கான்மனைவி கிரண் ராவ் ஆகியோர் பார்ட்டிக்கு வந்திருந்தனர். மேலும் புதிதாக திருமணமான கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் தனது மனைவியும் நடிகையுமான  சகாரிகா கட்கேவுடன் வந்து ஆகாஷ், ஸ்லோகாவை வாழ்த்தினார்.
ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே அம்பானி குடும்பத்தாருக்கு தெரியும். ஆகாஷும், ஸ்லோகாவும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்.  ஸ்லோகா மேத்தா தனது தந்தையின் வைர வியாபார நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.