செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (08:31 IST)

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படட்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் வெளியான முழுநீள ப்ளாக் காமெடி என்ற பெருமையை சூதுகவ்வும் பெற்றது. அதற்கு முன்னர் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் ஆரண்ய காண்டம் (சில காட்சிகள்) ஆகியவை வெற்றிப் படமாக அமையவில்லை.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி வி குமார். எஸ் ஜெ அர்ஜுன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருணாகாரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது.