புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (18:18 IST)

நடிகர் சங்க கட்டட பணிகளை முடிக்க என்னிடம் திட்டங்கள் உள்ளது: ஐசரி கணேஷ்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலையில் சுவாமி சங்கரதாஸ் அணி என ஒரு புதிய அணி உருவாகியுள்ளது. இந்த அணியில் இருந்து பாக்யராஜ், ஐசரி கணேஷ், ஜெயம் ரவி, குட்டிபத்மினி உள்பட பலர் போட்டியிடவுள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாக்யராஜ் கூறியபோது, 'யார் தலைமையேற்றாலும் கட்டடம் நல்ல முறையில் வரவேண்டும் என்பதே தனது ஆசை என்றும், யார் தலைவரானாலும் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் கமல் கூறியதாகவும், அதேபோல்  'நான் தலைவாராக வந்தால் நன்றாக இருக்கும் என ரஜினியும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்' என்றும் பாக்யராஜ் தெரிவித்தார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், 'இளம் நடிகர்கள் சிலரும் எங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு 6 மாதத்தில் நடிகர் சங்க கட்டட பணிகளை முடிப்போம் என்றும், நடிகர் சங்க கட்டட பணிகளை முடிக்க இன்னும் ரூ.22 கோடி தேவை, அதற்கு என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளன' என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.