செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (07:48 IST)

மனிதனை மனிதன் தான் காப்பாற்றவேண்டும், கடவுள் வரமாட்டார்: விஜய் சேதுபதி பரபரப்பு பேச்சு

மனிதனை மனிதன் தான் காப்பாற்றவேண்டும்
விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசியபோது ’மனிதனை மனிதன் மட்டுமே காப்பாற்ற வேண்டும், கடவுள் காப்பாற்ற மாட்டார் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடவுளை காப்பாற்றுவதாக கூறும் கும்பலிடமிருந்து தள்ளியே இருங்கள் என்றும், கடவுள் மனிதனை காப்பாற்ற மாட்டார் என்றும், மனிதன் தான் மனிதனை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்
 
மேலும் கடவுளை காப்பாற்றுவதாக கூறும் கும்பலிடமிருந்து தள்ளியே இருங்கள் என்றும் கடவுளுக்கு தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரிந்தும் தெரியும் என்றும் அவரை யாரும் காப்பாற்ற தேவையில்லை என்றும் கூறினார். மேலும் மதம் மனிதனுக்கு தேவையில்லாதது என்றும் மதத்தை வைத்து சண்டை போடும் கும்பலிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்படவேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்தார்  விஜய் சேதுபதியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது