செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (08:48 IST)

விஜய்சேதுபதிக்கு அமீர்கான் போட்ட நிபந்தனை: அதிர்ச்சி தகவல்

விஜய்சேதுபதிக்கு அமீர்கான் போட்ட நிபந்தனை
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தற்போது இந்தி படத்திலும் எண்ட்ரி ஆகியுள்ளார். அமீர்கான் நடித்து வரும் பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் 
 
இந்த படத்தில் அமீர்கான் உடன் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் வகையில் விஜய்சேதுபதிக்கு நெருக்கமான ஒரு கேரக்டராம். இந்த நிலையில் அமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இந்த படத்தில் ராணுவ அதிகாரிகளாக நடித்து வருவதாகவும் இதனை அடுத்து இருவருமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும் இயக்குனர் நிபந்தனை வைத்திருப்பதாக தெரிகிறது
 
இதனை அடுத்து அமீர்கான் தனது உடல் எடையை 30 கிலோ குறைப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அது மட்டுமன்றி விஜய்சேதுபதியை தன்னை விட அதிகமாக நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளாராம் 
 
இந்த படத்தில் இருவரும் உண்மையான ராணுவ அதிகாரி போல் ஸ்லிம்மாக காட்சி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் உடல் எடை தற்போது அதிகரித்துக் கொண்டு வந்ததால் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் இந்த படத்திற்காக அவர் 30 கிலோ எடையை குறைக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது