ஒரு நாளைக்கு ஒரு கோடி ஆயிடும் போல இருக்கே… விஜய் சேதுபதியின் சம்பளம்!

Last Modified திங்கள், 17 மே 2021 (13:16 IST)

நடிகர் விஜய் சேதுபதி இந்தி படங்களில் அதிக வாய்ப்பு வருவதால் சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி விட்டாராம்.

விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் மற்றும் உப்பென்னா ஆகிய படங்கள் செம்ம ஹிட் ஆனதால் அவருக்கு மற்ற மொழிகளில் இருந்து அதிக வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இதனால் அவர் எக்கச்சக்கமாக சம்பளத்தை ஏற்றி விட்டாராம். அதுவும் இந்தி படங்கள் என்றால் 25 நாட்கள் கால்ஷீட்டுக்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை வாங்குகிறாராம். இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற ரேஞ்சில் இருக்கிறதாம். ஆனாலும் அவர் கைவசம் இப்போது 15 படங்களுக்கு மேல் உள்ளன என்று சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :